காத்தான்குடி: காத்தான்குடி வாவியில் சுமார் 15 அடி நீளமுடைய முதலையொன்று நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி 3 இமாம்கொமைனி வீதி முடிவடையும் சந்தியிலேயே இம்முதலை நடமாடித்திரிவதாகவும் இரவு நேரங்களில் வாவியிலிருந்து கரைக்கு வந்து செல்வதாகவும் தான் அதனை நேரில் கண்டதாகவும் அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லும் யூ.எம். அப்துல் காதர் தெரிவித்தார்.
பகல் வேளைகளில் இந்தப்பகுதியை விளையாட்டுத்திடலாக சிறுவர்கள் பயன்படுத்துகின்ற அதேவேளை இரவு நேரங்களில் இளைஞர்கள் பொழுது போக்கு இடமாகவும் இப்பகுதி காணப்படுகிறது. இது விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கவனமெடுக்கவேண்டும் என அப்பகுதி மக்களும் மீனவர்களும் தெரிவிக்கின்றனர்.
2வருடங்களுக்கு முன்னர் குபா பள்ளியை அண்டிய பகுதியில் மீனவர் ஒருவர் முதளையின் இரைக்கு காவுகொள்ளப்பட்டு ஜனாஸாவாக மீடகப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments