பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் மரமொன்றில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் பல்கலைக்கழக மாணவன் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு சக மாணவர் ஒருவர் விடுதிக்குள் மேலும் சில மாணவர்களால் பலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில் சாட்சியாளராக இருந்த மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற நாள் முதல் குறித்த மாணவன் பல்கலைக்கழகத்திற்கு சமுகமளிக்கவில்லை என்பதும் தெரிவந்துள்ளது.
அங்குனகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதான மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் இன்று நீதவான் விசாரணை நடைபெறவுள்ளது.
0 Comments