Advertisement

Main Ad

பாகிஸ்தானில் வீட்டுக்குள் புகுந்து தற்கொலைப்படை தாக்குதல்: 4 பெண்கள் பரிதாப பலி



பாகிஸ்தானில் வீட்டுக்குள் புகுந்து தற்கொலைப்படை தாக்குதல்: 4 பெண்கள் பரிதாப பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் பெஷாவர் நகரில் உள்ள சம்கனி பகுதியில் நேற்று ஒரு மர்ம நபர் சந்தேகப்படும் வகையில் அங்கும் இங்குமாக திரிந்து கொண்டிருந்தான்.

அவனது நடத்தையை கண்டு சந்தேகப்பட்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து அவனை பிடித்து விசாரிக்க முயன்ற போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக அருகாமையில் உள்ள ஜான் முஹம்மது அஃப்ரிடி என்ற முதியவரின் வீட்டுக்குள் நுழைந்த அவன் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டான்.

உள்ளே இருந்தபடி போலீசாரை நோக்கி அவன் துப்பாக்கியால் சுட்டான். வெளியே இருந்த போலீசாரும் துப்பாக்கியால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த மர்ம நபரின் உடலில் இருந்த வெடிகுண்டு அங்கி வெடித்து சிதறியது.

இதில் அந்த தற்கொலைப்படை தீவிரவாதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தான். அந்த வீட்டின் பெரும்பகுதி இந்த குண்டு வெடிப்பில் சேதமடைந்து இடிந்து விழுந்தது. குண்டு வெடிப்பால் காயமடைந்தும் இடிபாடுகளில் சிக்கியும் 4 பெண்கள் இச்சம்பவத்தில் பலியாகினர்.

2 குழந்தைகள், 1 பெண் உள்பட படுகாயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சைக்காக பெஷாவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments