Advertisement

Main Ad

ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுப் பொருட்கள் கையளிப்பு


(ஆர்.ஹஸன்)

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பத்து முன்னணி கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு சன்னி விளையாட்டுக் கழகம், ஜெயந்திபுரம் விபுலானந்தா விளையாட்டுக் கழகம், மஞ்சத்தொடுவாய் தெற்கு சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி சன்ரைஸ் விளையாட்டுக் கழகம், காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகம் உள்ளிட்ட 10 கழகங்களுக்கே மேற்படி விளையாட்டுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவற்றில் வைத்து மேற்படி கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

இருதயபுரம் சன்னி விளையாட்டுக் கழகத்துக்கு ஜேர்ஸி உள்ளிட்ட பொருட்களும், மஞ்சத்தொடுவாய் தெற்கு சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு கால்பந்து விளையாட்டுக்குத் தேவையான பூட்ஸ் மற்றும் கால்பந்துகளும், விபுலானந்தா விளையாட்டுக் கழகம், காத்தான்குடி குபா கழகம், சன்ரைஸ் கழகம் என்பவற்றுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், “நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாதத்தை விளையாட்டுத்துறை மூலம் தோற்கடிக்க முடியும் என்றும், விளையாட்டுக்களை சரியான முறையில் கையாண்டால் சமூக ஒற்றுமை – நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments