ஊழியரை தாக்கிய IGB மீது பாயாத சட்டம் ஏன் மீது பாய்கிறது!
ஊழியர்கள் இருவரை தாக்கும் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காத சட்டம், நான் பொலிஸ் உத்தியோகத்தர்களை மிரட்டியதாக, என் மீது நடவடிக்கை எடுக்க துடிப்பது வேடிக்கையானது என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
கம்புறுப்பிட்டியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்..
எங்களை எதிலாவது மாட்டிவிடுவதற்கு இவ்வாட்சியாளர்கள் மிகவும் சிரத்தை எடுத்து கொண்டிருக்கின்றனர். எங்கள் மீது மலையளவு குற்றச் சாட்டுக்களை முன் வைத்தவர்களுக்கு எங்களை கைது செய்ய துரும்பளவான விடயம் கூட கிடைக்கவில்லை. தற்போது நான் பொலிஸ் அதிகாரியை மிரட்டியதாக கூறி என்னை கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனை வைத்தாவது எங்களை அடிபணியச் செய்துவிடலாம் என இவ்வாட்சியாளர்கள் பகற் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் ஊழியர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் மா அதிபர் மீது எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு ஆதரமாக தெளிவான காணொளி சாதாரணமாகவே சமூக வலைத் தளங்களில் பரவியுள்ளது. இது குறித்து கருத்துரைத்துள்ள பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை ஒரு சாதாரண சம்பவமாக கூறியுள்ளார். எனினும், நான் ஒரு பொலிஸ் அதிகாரியை மிரட்டியதான குற்றச் சாட்டை முன் வைத்து, அதனை பாரிய குற்றமாக வர்ணித்து என்னை கைது செய்ய முயற்சிக்கின்றார்கள்.
தங்களது தேவைகளை நிறைவு செய்யவும் தங்களுக்கு விரோதமானவர்களுக்கு மாத்திரமே சட்டம் நிலை நாட்டப்படும். இது தான் இன்று நீதியை நிலை நாட்ட வந்த நல்லாட்சியில் நீதி நிலைநாட்டப்படும் விதமாகும். இவ்வாறான போலி குற்றச் சாட்டுக்களுக்கு அஞ்சி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல என்பதை இவ்வாட்சியாளர்களுக்கு தான் கூறிக்கொள்ள விருப்புவதாக தனது உரையில் தெரிவித்திருந்தார்.

0 Comments