Advertisement

Main Ad

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாரை மாவட்ட மக்கள் மனங்களிலிருந்து துாரப் போகின்ற நிலை காணப்படுவாக நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.


(எஸ்.அஷ்ரப்கான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் தொடர்பான விடயம் மற்றும் பிழையான நேரங்களில் பிழையான முடிவுகளை எடுப்பதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாரை மாவட்ட மக்கள் மனங்களிலிருந்து துாரப் போகின்ற நிலை காணப்படுவாக நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவரும் பொறியியலாளருமான யூ.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.

அகில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது அரசியல் நகர்வுகள் தொடர்பாக அம்பாரை மாவட்ட மக்களிடம் கொடுக்கின்ற வாக்குறுதிகள் மற்றும் அரசியல் காய் நகர்த்தல்கள் தொடர்பாக கருத்து வெளியிடும்போது மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

அ.இ.ம.கா. கட்சியின் செயலாளராக செயற்பட்ட வை.எல்.எஸ். ஹமீட் ஒரு மாநாட்டின் மூலம் பதவி நீக்கப்பட்டதாக அறிவித்த நிலையில் புதிய செயலாளராக சுபைர்தீன் என்பவரை நியமித்து அக்கட்சி செயற்பாட்டில் இறங்கியது. ஆனால் வை.எல்.எஸ். இந்த செயலாளர் நாயகம் நியமனம் சட்ட விரோதமானது என்றும் இதற்கான தடையுத்தரவை வேண்டியும் நீதிமன்றம் சென்றார்.

இந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி இத்தடை உத்தரவுக் கோரிக்கை மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்படுவதை மறுத்து வழக்கை தொடர்ந்து நடாத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேநேரம் இவ்வுத்தரவில் செயலாளராக யார் செயற்பட வேண்டும் என்று நீதிமன்றம் எதனையும் குறிப்பிடவில்லை. அது வழக்கு விசாரணை முடிவிலேயே தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் வை.எல்.எஸ். ஹமீடினால் மேன்முறையீடு செய்துள்ளதாகவும், இந் நிலையில் சடுதியாக அ.இ.ம.கா. கட்சி சுபைர்தீனை செயலாளராக செயற்பட நீதிமன்றம் அனுமதி என்ற விடயம் பொய் என வை.எல்.எஸ். ஹமீட் மறுத்திருந்தார்.

இவ்வாறு அக்கட்சி செயற்படுவதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழந்து கொண்டுவருகின்றது. நாபீர் பௌண்டேசன் போன்று நேர்மையான அடிப்படையில் தமது சேவைகளை செய்து வருகின்ற அதே வேளை மக்கள் ஆதரவினை மிகச் சிறப்பாக நாளுக்கு நாள் தன்னகத்தே அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

எனவே மக்கள் மனங்களில் பொய் அரசியல் வாக்குறுதிகளையும், பொய் மூட்டைகளையும் அவிழ்த்துவிட்டு மக்களைக் குழப்பாமல் துாய்மையான அரசியல் சித்தாந்தத்தை ஏற்படுத்த நாபீர் பௌண்டேசன் அழைப்பு விடுக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments