லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய காட்சியறையை கல்முனையில் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (09) கலந்து கொண்டார்.
லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிராஸ் மீராஸாப்பின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் ஏ ஜெ எம் ஜமீல், கிரபைட் நிறுவன தலைவர் மஜீத், முன்னாள் உபவேந்தர் இஸ் மாயீல் மற்றும் அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கௌதம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments