Advertisement

Main Ad

இளைஞர்கள் ஆசீர்வாதத்துடன் புனரமைக்கப்படும் தேசிய காங்கிரஸ்.



தேசிய காங்கிரஸ் தன்னை கட்டமைப்பு ரீதியில் புனர்ஸ்தானம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று ( 17/07/2017) மாலை சம்மாந்துறையில் இடம் பெற்றது. சுமார் எண்பது பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஏராழமான இளைஞர்கள் இணைந்திருந்தமை விசேட அம்சமாகும்.

மறைந்த மாமனிதர் அஷ்ரபுக்குப் பிற்பாடு அன்னாருடைய கொள்கையை சுமந்து பெருந்தலைவர் வழி ஒழுகிவரும் தேசிய காங்கிரஸ் மீண்டுவர இளைஞர்கள் தமது ஆசீர்வாதத்தினை வழங்கிவருகின்றமை நேற்றைய நிகழ்வின் மூலம் ஊர்ஜிதமானது.

நேற்றைய நிகழ்வில் சம்மாந்துறை மத்தியகுழு மீள் கட்டமைப்பு செய்யப்பட்டதுடன் எதிர்கால கட்சி நடவடிக்கைகள் தொடர்பிலும் தலைவரால் ஆராயப்பட்டது. 

தேசிய அமைப்பாளரும், மாகாண சபை எதிர்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, தேசிய கொள்கை பரப்புச் செயளாளர் சட்டத்தரணி பஹீஜ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஷிபான் BM.
மருதமுனை.

Post a Comment

0 Comments