Advertisement

Main Ad

பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தாணிகா் டொக்டா் சராஸ் அகமட் ஹான் சிப்ரா 16 கணனிகளைக் கொண்ட கணனி நிலையம் ஒன்றை திறந்து வைத்தாா்.

(அஷ்ரப் ஏ சமத்)

பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தாணிகா் டொக்டா் சராஸ் அகமட்  ஹான் சிப்ரா இன்று(5) மருதாணையில் உள்ள வை.எம்.எம். ஏ யின் தலையமையகத்தில் 16 கணனிகளைக் கொண்ட கணனி நிலையம் ஒன்றை திறந்து வைத்தாா். 2006ல் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அலுவலகத்தினால் திறந்து வைக்கப்பட்ட இக்  கணனி நிலையம் சில காலம் கணனிகள் பழுதடைந்த நிலைமையில் மூடப்பட்டிருந்தது. 

இதனை பாக்கிஸ்தான் உயா்ஸ்தாணிகரின் கவனத்திற் கொண்டு வந்ததையடுத்து அந் நிலையம்  மீள புதிய கணனிகளை கொண்டு திறந்துவைகக்பட்டது. இந் வைவபவத்தில் கணனி பொறுப்பான தலைவா் திரு.சலீம், மற்றும் வை.எம்.எம். ஏ யின் தலைவா் தொளபீக் சுபைா் மற்றும் நிறுவான உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்  அத்துடன் இங்கு பயிலும் பயிற்சி நெறிகள் தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் உள்ள நைட்டா நிலையத்தின் ஊடாக பதியப்பட்டு அவா்களது மேற்பாா்வையில் இப் பயிற்சி நெறிகள் வழங்கப்படும். இதனை பாக்கிஸ்தான்- இலங்கை நட்புரறவு வா்த்தக நிதியம் ஏற்பாட்டிலும் மேற்பாா்வையிலும் இங்கு பயிற்சி நெறிகள் நடைபெறும். 

Post a Comment

0 Comments