Advertisement

Main Ad

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும்

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் கழகத்தின் தலைவர்  ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் அவர்களின் தலைமையில் ஆயுட்காலச் செயலாளர் எஸ்.முஹம்மட் கானின் நெறிப்படுத்தலில் இன்று (23) சாய்ந்தமருது பௌஸி ஞாபகார்த்த மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் பிரதேச அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுக் கழகங்களின் உயர்பீட உறுப்பினர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள்  பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு விசேட பயான் மற்றும் துஆ பிரார்த்தனையினைமௌலவி ஏ.எல்.எம்.முஸ்தபா   அவர்கள் நிகழ்த்தினார்.

Post a Comment

0 Comments