கொடூர பயங்கரவாதத்தினால் வடமாகாண முஸ்லிம்கள் ஒட்டுமொத்த உடமைகளையும் இழந்து பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடையமே. ஆனால் போர் ஓய்ந்து "வடக்கின் வசந்தம்" வாசம் வீசியும் முஸ்லிம்மக்கள் இன்று வரை ஒட்டு மொத்தமாக மீள்குடியேற்றப்படவோ அல்லது அவர்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவோ முடியாத சூழ்னிலைகளே காணப்படுகின்றது.
வடக்கிலே சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் செல்வாக்கு இருந்தும் மக்கள் செல்லாக்காசுகளாகவே மாறியிருக்கின்றார்களே ஒழிய சுபீட்சம் பெறவில்லை. இந்த வேளையில் தான் தேசிய காங்கிரஸின் வடக்கை நோக்கிய நகர்வும், தேசிய காங்கிரஸில் வடக்கில் இருந்து வந்து இணைந்து கொண்ட ஜென்ஸி ராணியின் அதிரடி அறிக்கையும் வடக்கு ஒரு "ஜெண்டில்மேன் பொலிடீசியனுக்காக" அதாவது ஒரு நேர்மையான பொய்யுரைக்காத அரசியல் வாதி ஒருவரின் தேடலை வேண்டி நிற்கின்றமை உணர்த்தப்படுகிறது.
இதன் அடிப்படையில் இன்று வெறும் உணர்ச்சி அரசியலையும், பசப்பு வார்த்தைகளையும் நம்பி கிழக்கு மக்கள் ஏமாற்றமடைந்து , அமைச்சரவை அந்தஸ்துள்ள அதாவுல்லா என்கின்ற முன்னாள் அமைச்சரை இழந்து அவரின் மீள் வருகைக்காக தவிக்கும் போது, வடக்கு அவரை வாஞ்சையோடு அழைப்பது உண்மையானதோர் மக்கள் சேவகனுக்குக் கிடைத்த மணிமகுடமாகும்.
தலைவர் அஷ்ரப் பாசறையில் புடம் போட்டு வளர்ந்த தேசிய காங்கிரஸ் தலைமையினால் மாத்திரமே வடக்கு முஸ்லிம்கள் ஒளி பெறமுடியும். இது வரை காலமும் முஸ்லிம் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாத வடக்கு மக்களின் துயர் இன்ஷா அல்லாஹ் தேசிய காங்கிரஸின் வடக்கை நோக்கிய பயணத்தின் மூலம் துடைத்தெறியப்படும்.
மேலும், ஏலவே அஷ்ரப் எனும் மாதலைவன் கூறிச்சென்ற" ரணில் எனும் வாகனத்தில் ஏறிவிடாதீர்கள்" என்ற வசியத் பழைய சித்தாந்தமாக பலரால் நோக்கப்பட்டாலும் இன்றைய நாட்டின் சூழ்நிலையில் உண்மையென நிரூபணமாகியுள்ளது. அஷ்ரபுடைய வார்த்தைக்கு மாற்றமாக செயற்பட்டுவரும் சத்தியமும் சாணக்கியமும் வடக்கில் நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்தின் கோமாளிப்பாத்திரத்தில் இருந்து ஓரங்கட்டப்படும் நாள் தொலைவில் இல்லை.
Shifaan Bm
மருதமுனை.


0 Comments