Advertisement

Main Ad

கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கான தீர்வு துரிதப்படுத்தப்பட வேண்டும் பிரதமரிடம் கிழக்கு முதல்வர் கோரிக்கை



கிழக்கின் தொண்டராசியர்களின் பிரச்சினைகள் தொடர்பில்  கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில்  இ்ன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே கிழக்கு முதல்வர் இந்த விடயத்தை பிரதமரிடம் எடுத்துரைத்தார்,

இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு முதல்வர் நசீர் அஹமட் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கல்வியமைச்சி்ன் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சியை உடன் அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொண்டராசிரியர்களின் நியமனம் தொடர்பான தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிந்தார்,

இதையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வினை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் கடந்த  2013 ஆம் ஆண்டு வரையான  தொண்டராசிரியர்களை கல்விச் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.

தொண்டராசிரியர்களை நியமிக்கு விடயத்தை மாகாண கல்வியமைச்சிடம் கையளிக்க வேண்டும் எனவும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் குறித்த காலப்பகுதிகளில் தற்போதைய கல்வியமைச்சரான எஸ் தண்டாயுதபானி அவர்கள் முன்னாள் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியமையினால்  அவர் உட்பட அவரது நிர்வகாத்தினருக்கும் தொண்டராசியர்களின் நியமனம் தொடர்பில் உண்மையாகவும் இலகுவாகவும் இந்த விடயம் தொடர்பில் செயற்பட முடியும் எனவும் கிழக்கு முதல்வர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினார்.

கிழக்கின் தொண்டராசியர்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தக் காலப்பகுதிகளிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கடமையாற்றியவர்கள் இன்றும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமரிடம் எடுத்துரைத்தார்

Post a Comment

0 Comments