தென்மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்படுவதாக தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர கூறியுள்ளார்.
மழையுடனான வானிலை இல்லாத போதிலும், சில பகுதிகளில் வௌ்ளம் தேங்கியுள்ளதுடன் மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிப்பதால், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி, தேவைக்கேற்ப பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிக்கப்படும் எனவும் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் தெஹியோவிட்ட மற்றும் இறக்குவான பகுதிகளில் தற்காலிக முகாம்களாக இயங்கும் அனைத்து பாடசாலைகளும் நாளை விடுமுறை வழங்கப்படுவதாகவும் மாகாண கல்வி அமைச்சர் பானு மனுப்பிரய குறிப்பிட்டுள்ளார்.

0 Comments