Advertisement

Main Ad

பிரதியமைச்சர் ஹரீசின் தந்தையாரின் மறைவுக்கு றிஷாட் அனுதாபம்



ஊடகப்பிரிவு

பிரதியமைச்சரின் தந்தையாரின் மறைவு தனக்கு பெருங்கவலையளித்ததாக அமைச்சர் றிஷாட் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சமூக சேவையாளரான மர்ஹூம்  அல்ஹாஜ் ஹபீப் முஹம்மத் கல்முனை மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். முஸ்லிம் சமூகத்துக்கான ஒரு கட்சியை உருவாக்க மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் முன்வந்த போது பல வழிகளிலும் தன்னை அர்ப்பணித்து உதவி புரிந்தவர்.

அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும் உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.

Post a Comment

0 Comments