Advertisement

Main Ad

முதலில் பேய்... அடுத்து தேனீக்கள்; பதறியோடினர் எம்பிக்கள்


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு விடுதி ஒன்று நுவரெலியாவில்உள்ளது.பிரித்தானிய ஆட்சியாளர்களால் ஓய்வு விடுதியாகப் பயன்படுத்தப்பட்டஇல்லம்தான் இலங்கை எம்பிக்கள் ஓய்வு விடுதியாக மாறியுள்ளது.

இந்த விடுதி அவ்வப்போது சர்ச்சைக்குள் சிக்குவதுண்டு.ஓரிரு மாதங்களுக்கு முன்ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான நலின் பண்டார அந்த விடுதியில் தங்கிஇருந்தபோது பேய்த் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து தேனீக்களும் அங்கு செல்லும் எம்பிக்களைத் தாக்கத் தொடங்கின.

அந்த விடுதியைச் சுற்றி யன்னல் கதவுகளில் பத்து,பதினைந்து தேன் கூடுகள்திடீரெனத் தோன்றின.இதனால் அங்கு செல்லும் எம்பிக்கள் கடும் அசௌகரீகத்தைஎதிர்கொள்ளத் தொடங்கினர்.ஒவ்வொரு எம்பிக்களையும் அந்தத் தேனீக்கள் பதம்பார்க்கத் தொடங்கின.
அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத எம்பிக்கள் உரிய அதிகாரிகளிடம்முறைப்பாடு செய்ய
அந்த அதிகாரிகளின் ஏற்பட்டால் அண்மையில் அந்தத் தேன் கூடுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன.இப்போது எம்பிக்கள்நிம்மதியாக அங்கு ஓய்வு எடுக்கிறார்களாம்.

[எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்]

Post a Comment

0 Comments