உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் காஸ்டெல்லோ கூறியதாவது:-
கடந்த 2015-ல் மட்டும் 10 முதல் 19 வயதுடைய இளம் பருவத்தினர், 11 லட்சம் பேர் (தினமும் சுமார் 3,000 பேர்) சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். 72,655 பேர் மூச்சு திணறல் நோய்களாலும், 67,149 பேர் தற்கொலை செய்து கொண்டும், 63,575 பேர் வயிறு சம்பந்தமான நோய்களாலும், 57,125 பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ், மூச்சு திணறல், வயிற்று உபாதை ஆகியவை தான் இளம் வயதினரை அதிக அளவில் பலி கொண்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பெற்றோர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகம் தான் வயது வந்த இளம்பருவத்தினரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments