Advertisement

Main Ad

முச்சக்கரவண்டி 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து...


(க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயங்பட்டுள்ளார்.

நானுஓயா நகரத்திலிருந்து உடரதல்ல தோட்டத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டியொன்று 17.05.2017 அன்று இரவு 10.30 மணிக்கு நானுஓயா உடரதல்ல பிரதான வீதியில் கிளாசோ தோட்ட பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments