நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு சீனி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
வியாபாரிகள் சிலர் கூடுதல் விலையில் சீனி விற்பனையில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு கிலோகிராம் சீனியின் நிர்ணய விலை 93 ரூபா என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனைவிட கூடுதல் விலைக்கு சீனி விற்கப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்காக மாவட்ட ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் கூறினார்.
0 Comments