Advertisement

Main Ad

பாகிஸ்தான் உள்பட 5 இஸ்லாமியர் பெரும்பான்மை நாடுகளுக்கு குவைத் விசா தடைவிதிப்பு



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தம் என அதிரடியாக உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் விமர்சனம் எழுந்து வரும்நிலையில் குவைத் பாகிஸ்தான் உள்பட 5 இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளுக்கு விசா வழங்குவதற்கு தடை விதித்தது. சிரியா, ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை குவைத் சஸ்பெண்ட் செய்து உள்ளது.

தடை செய்யப்பட்ட இந்த நாடுகளில் இருந்து அடைக்கலம் கோரி யாரும் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் அகதிகள் போர்வையில் உள்ளே நுழைந்துவிடலாம் என்ற அச்சத்தில் இந்நடவடிக்கை குவைத்தில் எடுக்கப்பட்டு உள்ளதாக ஸ்புட்னிக் இன்டர்நேஷ்னல் செய்தி வெளியிட்டு உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டும் குவைத் சிரியா நாட்டவர்களுக்கு விசா வழக்குவதை சஸ்பெண்ட் செய்தது.

கடந்த 2015-ம் ஆண்டு ஷியா மசூதியில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியதில் குவைத் நாட்டவர்கள் 27 பேர் பலியாகினர். 

Post a Comment

0 Comments