வலிகாமம் வடக்கு மீள்குடியேறிய மக்களுக்கு மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வலிகாமம் பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நீண்டகாலமாக மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான மின்சாரத்தினைப் பெற்றுக் கொடுப்பது
தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
நீண்ட காலமாக மின்சாரம் வழங்கப்படாமை தொடர்பாக யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மின்சாரத்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments