(எஸ்.அஷ்ரப்கான்)
சிறீ லங்கா தெளஹீத் ஜமாஅத் கல்முனை கிளையினால் கல்முனை பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக ஆற்றிய சேவைக்காக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய காரியாலயத்தினால் அக்காரியாலயத்தில் வைத்து நேற்று (15) இவ்வமைப்பின் சேவையைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அண்மைக் காலமாக நாட்டில் பெருகிவரும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக சிறீ லங்கா தெளஹீத் ஜமாஅத் கல்முனை கிளையினால் கல்முனை பிரதேசத்தில் கல்முனை தெற்கு சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்முனை மாநகர சபையில் ஒத்துழைப்புடன் கடந்த 06.12.2016 அன்று விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது பொதுமக்களுக்கு டெங்கு நோய் பற்றி விழிப்புணர்வு வழங்கும் முகமாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பெருகும் குப்பைகள் கல்முனை மாநகர வண்டிகள் மூலம் அகற்றப்படடன. மேலும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த கொழும்பில் இருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட புகைவிசுரும் வண்டிகள் மூலம் கல்முனையின் பல பகுதிகளில் புகைவிசுறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை பாராட்டியே கல்முனை தெற்கு சுகாதார அதிகாரிகள் சார்பாக நன்றிக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments