கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், மூத்த ஊடகவியாலாளருமான யூ.எம்.சம்சுதீனின் (மிஸ்கீன் ஹாஜியார்) மறைவு கல்முனை பிரதேச மக்களுக்கு பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும அனுதாபச் செய்தியில்; தெரிவிக்கையில்,
மிஸ்கீன் ஹாஜியார் ஒரு பொறுப்பு வாய்ந்த
ஊடகவியலாளாராக செயற்பட்டவர். ஊரிலுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட சமூகம் சார்;ந்த பல்வேறு விடயங்களை ஊடக வாயிலாக வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுத்த ஒரு சமூக சேவையாளன்.
ஊடகவியலாளாராக செயற்பட்டவர். ஊரிலுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட சமூகம் சார்;ந்த பல்வேறு விடயங்களை ஊடக வாயிலாக வெளிக்கொண்டு வந்து அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுத்த ஒரு சமூக சேவையாளன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு மறைந்த ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப்புடன் தோளோடு தோள் நின்று செயற்பட்ட கட்சியின் ஒரு சிறந்த செயற்பாட்டாளர்.
கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராக செயற்பட்டு ஊர் சார்ந்த விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் சமரசப்படுத்துவதிலும் முன்னின்று உழைத்தவர். சிறந்த குடும்ப பின்னணியைக் கொண்டவர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் கல்முனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஒரு உறுப்பினராக செயற்பட்டார். இதன் மூலம் ஊர் அபிவிருத்திற்கு மறைந்த தலைவருடன் இணைந்து செயற்பட்டவர். நாகரீகமான அரசியல் செய்து காட்டியவர்.
எனது முதல் அரசியல் பிரவேசமான 2001ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது எனது வெற்றிக்காக முழு மனதுடன் செயற்பட்டவர். இத்தேர்தலில் கல்முனை தொகுதியின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்படக்கூடாது என்ற உணர்வுடன்; கட்சியின் வெற்றிக்காகவும் எனது வெற்றிக்காகவும இரவு பகல் பாறாது உழைத்தவர்.
அன்னாரின் மறைவினால் துயர்பட்டிருக்கும் குடும்பத்தார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாருக்கு மறுமையில் இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கின்றேன் எனவும் அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
- ஊடகப் பிரிவு -


0 Comments