Advertisement

Main Ad

இந்நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் தமிழ் பிரிவினைவாத்ததையும் முஸ்லிம் தீவிரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையும் வேரோடு களைய வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்


அபிவிருத்தியடையும் நிலையிலிருந்து அபிவிருத்தியடைந்த நாடொன்றின்      நிலையை இலங்கை அடைய வேண்டுமானால் அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து தமிழ் பிரிவினைவாத்தையும், முஸ்லிம் தீவிரவாதத்தையும், சிங்கள இனவாதத்தையும் இந்நாட்டிலிருந்து ஒழிதத்துக் கட்ட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.

அம்பத்தலை – ஒருகொடவத்தை தாழ்நில பாதை அபிவிருத்தியின்போது சொத்துக்களை இழந்த 150 பேருக்கு ரூ.300ஃ- மில்லியன் நட்டஈட்டை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறுப்பினர் இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதமர் அவர்களும் இணைந்து கொலொன்னாலை குப்பை மேட்டை பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுத்தார்கள். டிசம்பர் 31ம் திகதியின் பின்னர் கொலொன்னாவைக்கு குப்பைகள் வராது. இக்குப்பை மேடு கொலொன்னாவை அபிவிருத்தி நடவடிக்கைளுக்கு  பிரதான தடையாக  அமைந்திருக்கின்றது. குப்பைகளை கொணர்ந்து கொலொன்னாவையில் கொட்டியவன் எந்த மடையனோ என்று எண்ணத் தோன்றுகிறது.

துறைமுகத்திலிருந்து இரண்டு மீற்றர் துரத்தில் இப்பிரதேசம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமது  அதிவேகப் பாதையிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குள் கொலொன்னாவை அமைந்துள்ளது.  இப்பிரதேசத்தை கொழும்பின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன. இது முதலீட்டாளர்களால் நிரம்பி வழியக் கூடிய ஒரு மையமாகவும் கருதப்படுகின்றது. இவ்வாறான ஒரு இடத்தை தான் கடந்த கால ஆட்சியாளர்கள் குப்பை கொண்டு வந்து நிறைத்து நாசமாக்கினார்கள்.

குப்பை மேட்டை அகற்றியதன் பின்னர் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தை முதலீட்டு வலயமாகவும் சிறந்த வசதிகள் கொண்ட நகரமாகவும் மாற்றுவதற்குரிய திட்டங்கள் எம்மிடம் உண்டு. இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறம், கட்சி, இனவாதம் பாராது சேவை செய்யக் கூடிய அனைத்து கொலொன்னாவை மக்களினதும் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவைப்படுகின்றது.

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுடன் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காகவே எமது அரசு பதவியேற்றது.

எமது நாட்டை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டுமானால் எங்களுடைய இழி மனநிலையிலிருந்து நாம் வெளியேறி, சர்வதேசத்துடன் சிறந்த தொடர்புகளை பேண வேண்டும். அத்தோடு தமிழ் பிரிவனைவாதம், முஸ்லிம் தீவிரவாதம் மற்றும் சிங்கள இனவாதம் ஆகியவைகள் இந்நாட்டிலிருந்து முற்றாக துடைத்தெறியப்பட வேண்டுமென்பதை நான் ஆணித்தரமாகவே கூற விரும்புகிறேன். இவ்வாறான ஒரு நிலையில் தமிழ் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென உதய கம்மன்பில அவர்கள் கூறுகிறார்கள். அக்கூற்றை செவிமடுத்த நான் கவலையடைந்தேன். அவ்வாறு செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திருந்தால் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் காலத்தில் தடை செய்திருக்கலாமே? புதிய அரசியலமைப்பொன்றை வரைவதாயிருந்தால் அதற்கு பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் சம்மதத்துடன் மேற்கொள்ளுமாறு தமிழ் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ் கூட்டமைப்பை தடை செய்தால் இச்செயற்பாடு இன்னுமொரு யுத்தத்திற்கு வழிவகுக்கலாம். யுத்தமொன்றையாவது ஏற்படுத்தி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்பது இவர்களது பிரதான நோக்கம் என விளங்குகின்றது. அனைத்து இன மக்களும் அணிதிரண்டு இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.



Post a Comment

0 Comments