மன்னார் சவுத்பார் பகுதியிலும் கடும் காற்று வீசுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தில் பலத்த காற்று வீசுவதுடன், எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு கடற்படையினர் கேட்டுள்ளனர்.
வழமைக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக சவுத்பார் பகுதியைச் சேர்ந்த மக்கள் மன்னார் நகரை நோக்கி நகர்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments