எம்.ரீ. ஹைதர் அலி
இலுப்படிச்சேனை – வேப்ப வெட்டுவான் பிரதேசம் கொம்பர் சேனை பண்டாரக் கட்டு பகுதிகளில் அதிகமான விவசாயிகள் அவர்களுடைய விவசாயத்தினை விதைத்திருந்த போதிலும் உரிய காலத்தில் மழை நீர் கிடைக்காமை காரணமாக உறுகாமத்தில் இருந்து ஓடுகின்ற ஆற்றுநீர் சிறிய வாய்க்கால்கள் மூலமாக இந்த வயல் நிலங்களுக்கு பாய்ச்சப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் குறித்த கொம்பர் சேனை பிரதேசம் உறுகாமம் பெருநீர்பாசன திடத்தின் கீழ் உள்வாங்கப்படாமை காரணமாக தற்போது அந்த வாய்க்கால்கள் முற்றாக மூடப்பட்ட நிலை காணப்படுவதால் விவசாயிகள் தமது வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாக விதைக்கப்பட்ட வயல்கள் அதிக உஷ்ணத்தினால் கருகி போகின்ற நிலை காணப்படுகின்றது.
எனவே இப்பிரச்சனையினை உடனடியாக நிவர்த்தி செய்யும் முகமாக கடந்த 05.12.2016ஆம் திகதி குறித்த இடத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அங்குள்ள நிலைமையினை நேரடியாக பார்வையிட்டதோடு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்களுடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சனைக்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கமைவாக நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளருடன் 12.12.2016ஆந்திகதி குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விவசாயிகளின் பிரச்சனையினை நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளருக்கு தெளிவுபடுத்தினார்.
உறுகாமம் பெருநீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள பகுதிகளுக்கு அண்மித்த பிரதேசம் என்ற வகையில் இப்பகுதிக்கான நீர்பாசன தேவையினை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக உடனடியாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் மற்றும் நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றினூடாக இப்பிரச்சினை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதாக நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் இதன்போது வாக்குறுதியளித்தார்.
இதன்போது இப்பிரதேச மக்களின் பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
இப்பிரதேச மக்கள் உறுகாமம் பெருநீர்ப்பாசன திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத நிலையில் மழை நீரினை மாத்திரம் நம்பி தமது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் உரிய காலத்தில் மழை நீர் கிடைக்காமை காரணமாக தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இத்தகைய பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுக்க நேரிடுகின்றது. தற்போது 850 ஏக்கர்களுக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் அதிக வெயில் காரணமாக அழிவடையக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.
எனவே விவசாயத்தினை மாத்திரம் தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இம்மக்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வினை உடனடியாக பெற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது.
அந்த வகையில் இதுவிடயம் தொடர்பாக எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதோடு இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

0 Comments