Advertisement

Main Ad

வறுமையின் கோரப்பிடிக்குள்ளேயும் தமிழைவாழவைக்கும் எழுத்தாளர்களுக்கு உதவசித்தமாய் இருக்கின்றோம். வவுனியாகலாசார விழாவில் அமைச்சர்ரிஷாத் தெரிவிப்பு.



(அமைச்சின்ஊடகப்பிரிவு)

வறுமையின்  கோரப்பிடிக்குள் வாழ்ந்துகொண்டு தமிழை வளர்க்கும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும், கவிஞர்களையும் ஊக்குவிப்பதற்கு நாங்கள் என்றுமே சித்தமாக இருக்கின்றோமென்று அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேசசெயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து, வவுனியா நகரசபை மண்டபத்தில் நடாத்திய கலாச்சார விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர்ரிஷாத்பதியுதீன் இவ்வாறுகூறினார்.

இந்தநிகழ்வில் வன்னிமாவட்டப்பாராளுமன்ற உருப்பினர் டொக்டர் சிவமோகன், சிவசக்திஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் சத்தியலிங்கம், ஜெயதிலக, லிங்கநாதன், செந்தில்நான், மயூரன் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களாக முத்து முகம்மது அப்துல்பாரி, முஹைதீன் ஆகியோர்கலந்துகொண்டனர்.

அமைச்சர் ரிஷாத்பதியுதீன் மேலும் கூறியதாவது,

வவுனியாவில் நடைபெறுகின்ற இந்தவிழாவில் மாணவர்கள் தமதுதிறமைகளையும், ஆற்றல்களையும்வெளிப்படுத்தினர்.

அத்துடன் நமதுகலாசார பண்பாடுகளையும், விழுமியங்களையும் கலைவடிவிலும், கருத்துவடிவிலும் வெளிக்கொணர்ந்து அதற்குபுத்துயிரூட்டினர். இந்தநிகழ்ச்சிகள் நமது மனதுக்கு இனிமையாகவும், ஆறுதலாகவும் இருக்கின்றன.தமிழர்களும், முஸ்லிம்களும்மதத்தால் வேறுபட்டபோதும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். தமிழைவளர்த் தெடுப்பதிலும், வாழவைப்பதிலும் இரண்து சமூகங்களும் இணைந்து பணியாற்றிவருவது சிறப்பம்சமாகும்

. மொழிக்காக அவர்கள் ஆற்றுகின்ற பணி என்றுமே பாராட்டத்தக்கது.

கடந்த வாரம் கொழும்பிலேசுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் இஸ்லாமிய தமிழ்இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது.

அந்த விழாவை நடாத்திய இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் விழாவை ஏற்று நடாத்தும் தலைமைப் பொறுப்பை என்னிடம்கையளித்திருந்தது.

விழாவுக்கு தலைமைதாங்கும் பொறுப்பை பெரும்மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் ஏற்றுக்கொண்டேன். மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகியநாடுகளிருந்து பேராளர்களாக அந்த இலக்கியமாநாட்டுக்கு வந்ததமிழ்ப் பேரறிஞர்கள் கொழும்பிலே மூன்றுநாட்கள் தங்கியிருந்து தமிழினதும், தமிழிலக்கியத்தினதும் மகிமையையும், தொன்மையையும் சிறந்த முறையில் சிலாகித்தனர்.

தமிழ் மொழியை அழிந்து விடாமல் பாதுகாக்கின்ற, வளர்க்கின்ற, மூத்த எழுத்தாளர்கள் அறிஞர்கள், மற்றும் கலை ஞர்களை நாங்கள் பாராட்டுவதுடன் மட்டும் நின்று விடாது அவர்களுக்கு ஊக்கமளிக்கவேண்டும். இவர்கள்பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலே மொழியை வளர்தெடுப்பதில் ஆற்றுகின்ற பணிகளுக்காக இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகின்றேன்.

எதிர்காலத்திலே வடமாகாண சபை உட்பட வன்னிப்பிரதேசத்திலே பணியாற்றும் அரசியல் வாதிகளானநாங்களும்,  சமூக ஆர்வலர்களும் இணைந்து இவ்வாறான எழுத்தாளர்களை கைதூக்கிவிடும் வகையில் நல்ல பலதிட்டங்களை செயற்படுத்ததயாராகவுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர்ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments