இன்றைய உலகமயமாக்கல் சூழலில், தேர்தல்களும், தேர்தல் வெற்றி, தோல்விகளும் ஆட்சிமாற்றங்களும் நம் வாழ்வோடு சற்றும் தொடர்பில்லாத நிகழ்வுகள் என்பதே உண்மை. ஆட்சி என்பதன் பொருளும் நிர்வாகம் என்பதன் பொருளும் இன்று வெகுமாக மாறிவிட்டது.
இலங்கை எப்படி ஆளப்படவேண்டும் என்பதை ஆளுங்கட்சியால் மட்டுமே நிர்ணயம் செய்யமுடியாது. இலங்கை ஏற்ற கொள்கை என்ன என்பதை இலங்கை நாடாளுமன்றம் மட்டும் முடிவு செய்வதில்லை. நாடாளுமன்றம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களைக் கடந்து, நுட்பமான பல வலைப்பின்னல்களால் இன்றைய அரசியல் தளம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், அரசியல் அதிகாரம் என்பது இலங்கைக்கு வெளியிலும் பரவியிருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவி நிற்கும் இன்றைய காலகட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீட்டைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு மாற்றத்தையும் எந்தவொரு ஆட்சியாளரும் கொண்டுவந்துவிடமுடியாது.
இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா இலங்கை அரசியல் அதிகாரம் பற்றிக் கூறினார்
0 Comments