Advertisement

Main Ad

மடக்கும்புர மண்ணுக்கு பெருமை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த மண்ணுக்கு என்ன என்ன செய்துள்ளார்கள் என்பதினை முதலில் பார்த்து விட்டு தான் ஏனையவற்றை பேச வேண்டும்

(க.கிஷாந்தன்)

வட்டகொடை - மடக்கும்புர மண் என்பது அதிகமான தலைவர்களை உருவாக்கிய மண் பல அரசியல்வாதிகள் மடக்கும்புர மண்ணுக்கு பெருமை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த மண்ணுக்கு என்ன என்ன செய்துள்ளார்கள் என்பதினை முதலில் பார்த்து விட்டு தான் ஏனையவற்றை பேச வேண்டும் என மத்திய மாகாண விவசாய மீன்பிடி, தோட்ட உட்கடமைப்பு இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

விவசாய அமைச்சின் மூலம் தலவாக்கலை மடக்கும்புர பகுதியில் வசிக்கும் சுமார் 500 குடும்பங்களுக்கு மத்திய மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் குடும்பம் ஒன்றுக்க ஒரு நிரம்பிய பத்து கோழிக்குஞ்சிகள் வீதம் இருநூறு குடும்பங்களுக்கும், மண்வெட்டி முள், நீர்பாச்சும் பூ வாழி, வீட்டுத்தோட்டம் செய்வதற்கு மரக்கறி விதைகள், பசும் பால் சேகரிப்பதற்கு கேன், மாடுகள் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் போன்றன 12.12.2016 அன்று தலவாக்கலை மடக்கும்புர முதியோர் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டன. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நான் பிரதேசசபைக்கு தெரிவாகும் போது இங்குள்ள ஏழு தோட்டங்களில் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாது வீதிகள் குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையிலேயே காணப்பட்டன.

நான் அரசியல் ஆரம்பிக்கும் போது ஏழு தோட்டத்திலும் மின்சாரம் இருக்கவில்லை. குடிப்பதற்கு குடி நீர் இருக்கவில்லை. வைத்தியசாலை வசதி ஒழுங்காக இருக்கவில்லை. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. ஆனால் நான் வந்த பிறகு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுடன் பேசி அவரது ஆலோசனைக்கமைய பொதுமக்கள் அரசியல் வாதிகள் அனைவரும்  செல்லும் அளவுக்கு ஏழு தோட்டங்களில் வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

ஏழு தோட்டங்களில் ஒரு தோட்டத்திற்கு தலைவர் சந்திரசேகரன் அவர்களால் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஏனைய ஆறு தோட்டங்களுக்கும் நான் மின்சாரம் பெற்றுக்கொடுத்துள்ளேன். இந்த ஏழு தோட்டத்திலும் விளையாட்டு மைதானம் இல்லாத பற்றாக்குறை காணப்படட்டது.

இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று ஆறு தோட்டங்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். அந்த விளையாட்டு மைதானங்களை இன்று நீங்கள் வந்து பார்வையிடலாம். ஏழு தோட்டங்களிலும் மக்கள் குடிநீர் இன்றி பெரும்பாடுபட்டார்கள். அந்த பிரச்சினையை தீர்க்கும் முகமாக ஏழு தோட்டங்களிலும் குடிநீர் வசதியினை ஏற்படுத்தி கொடுத்தேன். அப்பப்ப குடிநீர் வசதிகள் இல்லாமல் போகலாம் ஆனால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அன்று மூன்று தோட்டங்களில் பாடசாலைகள் மாட்டுத்தொழுவம் போல் தான் இருந்தன. ஆனால் இன்று அந்நிலை மாற்றப்பட்டுள்ளது. வந்து பாரத்தால் தெரியும் அப்பாடசாலைகள் எவ்வாறு புதிதாக புதிப்பிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையினை எடுத்துக்கொண்டால் தோட்ட நிர்வாகத்தின் கீழேயே இயங்கி வந்தது. கடந்த ஒரு மாத்திற்கு முன் கூட பத்திரிகையில் இந்த வைத்தியசாலையின் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.

உடனே நான் மாகாண சுகாதார அமைச்சுடன் பேசி 40 லட்சம் ரூபா அதன் தேவையான உபகரணங்களை பெறவும் புனரமைக்கவும் பெற்றுக்கொடுத்தேன்.
பின் எம்புலன்ஸ் இல்லை என்றார்கள் அதனையும் பெற்றுக்கொடுத்துள்ளேன். உங்களுக்கு தெரியும் இந்திய அரசாங்கத்தினால் 4000 வீடுகள் கொடுக்கப்பட்டன.

அதில் தலைவர் தொண்டமான் ஐயா அவர்கள் கொத்மலை பகுதிக்கு 1000 வீடுகள் கொடுத்தார். அதில் டன்சீன், பார்லக்சி, புஸ்ஸல்லா, மடக்கும்புர மாத்திரம் எந்த வித கட்டணமும் அறவிடாது 200 வீடுகள் நான் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தேன். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் அதனை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டன இன்று அதனை மீண்டும் முன்னெடுப்பது மிகவும் சந்தோசமே.

இன்று இந்த முதியோர் இல்லத்தினை அமைக்கும் போது கூட தோட்ட நிர்வாகம் என்னிடம் பேசியது இன்று பிள்ளைகளால் பெற்றோர்களை பராமரிப்பதில்லை அதனால் அவர்கள் பெரும் துன்பப்படுகிறார்கள். எனவே இந்த முதியோர் இல்லத்தினை அமைக்கும் போது 20 லட்சம்  ரூபா வேலி அமைப்பதற்கும் அவர்கள் காலையில் நடந்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என எண்ணி நூறு இலட்சம் ரூபா செலவில் இன்டலொக் கற்கள் பதித்து பாதையினை செப்பனிட்டுக்கொடுத்தேன.

ஆகவே தேவையான அத்தனை விடயங்களையும் பிரதேசபை காலம் தொடக்கம் இன்று வரை செய்து வருகிறேன். இன்று மடக்கும்பர பகுதிக்கு வாசிகசாலை இருக்கவில்லை. நான் அதனை உருவாக்கினேன். இன்று எத்தனையோ பேர் அதன் பயனை பெற்றுள்ளார்கள். ஆகவே இன்று அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். எமது மக்கள் என்னனென்ன எப்போது தேவையோ அதனை செய்து கொடுக்க நான் ஒரு போதும் தயங்கிதில்லை.

எதிர்காலத்திலும் எமது மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவே நீங்கள் ஒற்றுமையாக என்றும் இருந்து செயப்பட வேண்டும் அப்போது தான் சகலவற்றினையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது முதியோர் இல்ல வளாகத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளினால் மரக்கன்றுகளுக்கான விதைகள் நாற்றி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண கால்நடை அமைச்சின் செயலாளர் ரத்நாயக்க, மேலதிக பணிப்பாளர் சுமிதா உட்பட பல அதிகாரிகள் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments