சிரியாவில் அரங்கேறும் மனிதப் பேரவலத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.சிரியாவில் கொத்துக் கொத்தாய் மடியும் மனித உயிர்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்.
இன்று உலகளாவிய ரீதியில் இஸ்லாமியர்களை நசுக்குவதற்கு மிக நுணுக்கமாக சதி வலை பின்னப்பட்டுள்ளதுடன் அதற்கான நிகழ்ச்சிரலுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை இன்று புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களிடையே போராட்டங்களை தோற்றுவித்து முஸ்லிம் சமூகத்தை சின்னாபின்னப்படுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அதற்காக முஸ்லிங்கள் சிலரே விலைபோய் இருப்பதுதான் வேதனையான விடயம்.
இன்று முஸ்லிங்களை ஒடுக்குவதற்கான செயற்பாடுகள் இலங்கையிலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இப்போது அது தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளன,இந்த சந்தரப்பத்தில் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு தமக்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும்.
இன்று மியன்மாரிலும் சிரியாவிலும் நிகழ்ந்தேறும் மனிதப் பேரவலம் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான அக்கிரமங்களின் உச்சகட்டமாகவே கருத வேண்டியுள்ளதுடன் கடந்த 30 ஆண்டுகளாக யுத்ததால் பேரிழப்புக்களை சந்தித்த நாடு என்ற வகையில் மனித உயிர்களின் பெறுமதியை இலங்கை அரசாங்கமும் இலங்கை மக்களும் அறிந்தே இருக்கின்றார்கள்.
எனவே சிரியாவில் இன்று அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் செயற்பாட்டினை மனித குலத்துக்கு எதிரான மாபெரும் அச்சுறுத்தலென கருதி அதனை தடுத்து நிறுத்துவதற்கு இனம மத மொழி பாராது அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
அத்துடன் முஸ்லிங்களும் தமது அன்றாட துஆக்களில் எமது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அக்கிரமங்களிலிருந்தும் சதிகளிலிருந்து பாதுகாப்பு கோரியும் நாம் பிரார்த்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.
0 Comments