Advertisement

Main Ad

சிரியாவில் கடும் சண்டை பல்மைரா நகரை மீண்டும் ஐ.எஸ். இயக்கத்தினர் கைப்பற்றினர் அலெப்போ மாவட்டத்தை ராணுவம் மீட்டது

பெய்ரூட்,
சிரியாவில் பழமையான பல்மைரா நகரை ஐ.எஸ். இயக்கத்தினர் கைப்பற்றிய நிலையில், அலெப்போ மாவட்டத்தை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து ராணுவம் மீட்டது.

உள்நாட்டுப்போர்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 2011–ம் ஆண்டு முதலே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். இவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மற்றொரு புறம் ஐ.எஸ். அமைப்பினரும் சிரிய அரசு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக சிரிய ராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்க மற்றும் ரஷிய படைகளும் சண்டையிட்டு வருகின்றன.

ராணுவம் முறியடித்ததுஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியம் மிக்க பல்மைரா நகரை ஐ.எஸ். இயக்கத்தினர் நீண்ட காலமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கூட்டுப்படைகளின் உதவியுடன் கடுமையான சண்டைக்கு பின் கடந்த மார்ச் மாதம் பல்மைரா நகரை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து சிரிய ராணுவம் மீட்டது.
இந்த நகரை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பலமுறை ஐ.எஸ். இயக்கத்தினர் முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிரிய ராணுவம் அதிரடி தாக்குதல்கள் மூலம் அவர்களது முயற்சியை முறியடித்தது.

தொடர்ந்து தாக்குதல்
இந்த நிலையில் பல்மைரா நகரை கைப்பற்றும் நோக்கில் ஐ.எஸ். இயக்கத்தினர் கடந்த 8–ந் தேதி அங்கு அதிரடி தாக்குதல்களை தொடங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்தது. 4 நாட்களாக நடந்த இந்த சண்டையின் இறுதியில் பல்மைரா நகரம் தற்போது ஐ.எஸ். அமைப்பினரின் வசமானது. எனவே அரசு படைகள் அங்கிருந்து வெளியேறின.

இந்த பயங்கர சண்டையில் 120–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதே போல் பயங்கரவாதிகள் தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அங்கு ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக கூட்டுப்படைகள் தொடர்ந்து வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

பொதுமக்கள் சாவுஇதற்கிடையே சிரியாவின் 2–வது பெரிய நகரமாக கருதப்படும் அலெப்போவின் மேற்கு பகுதி ராணுவத்தின் வசமும், கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசமும் இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கில் சிரிய படைகள் தாக்குதலை தொடங்கி உள்ளன. கடந்த மாதம் 15–ந் தேதி முதல் நடந்து வரும் இந்த தாக்குதலில் நேற்று காலை வரை 90 சதவீத பகுதியை ராணுவம் மீட்டு உள்ளது.

இந்த மோதலில் அலெப்போ நகரின் கிழக்குப்பகுதியில் அப்பாவி பொதுமக்கள் 413 பேரும், மேற்கு பகுதியில் 139 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
முன்னதாக ஷேக் சயீத் மாவட்டத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments