வர்தா புயலால் சென்னையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து கிடக்கின்றன.
சென்னை: வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன.
வர்தா புயல் சென்னைக்கு அருகே பழவேற்காடு - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடப்பதால் பலத்த காற்று வீசுகிறது. வர்தா புயல் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூரில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் மக்கள் வீடுகளை விட்டு இரவு 7 மணிவரை வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சூறாவளி காற்று வீசிவருவதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் சூறைகாற்றால் தூக்கி வீசப்பட்டன.
பலத்த காற்றால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் வேறுடன் முறிந்து விழுந்தது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. இதனிடையே சென்னை டிஎல்எப் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் காற்றில் பறந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

0 Comments