கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சுகாதார அமைச்சர் ஏ,எல்,எம் நசீர் ஆகியோரின் அழைப்பின் பேரில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன் போது 425 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை இதன் போது திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
அத்துடன் இதன் போது கிழக்கு முதலமைச்சரின் அயராத முயற்சியினால் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பகுதிகளுக்கு குடி நீர் கட்டமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் முழு ஒத்துழை்புடன் இதற்கான நிதியொதுக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் கட்டமைப்பிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக 370 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்
இதனை ஜனாதிபதி பெப்ரவரி முதலாம் திகதி பிரகடனப்படுத்தவுள்ளதுடன் கௌரவ அமைச்சரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மேற்கொண்ட முழுமையான முயற்சியினால் வாழைச்சேனையில் மற்றுமொரு பாரியநீர் வழங்கல் கட்டமைப்பிற்கு அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவக் குழுவின் முழு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியேற்ற காலத்தில் இருந்து மேற்கொண்ட முயற்சியின் பயனாகவும் அமைச்சர் ரவூப் ஹககீமின் முழு ஒத்துழைப்புடனும் இந்த திட்டத்திற்கு இரண்டாயிரத்து 250 கோடி ரூபா நிதியொதுக்கப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் இதற்கான திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments