Advertisement

Main Ad

இந்தியாவில் கூட முஸ்லீம்களுக்கென்று 3வீதமே ஊடகம் உள்ளது. ஆனால் இலங்கையில் 20 வருடகாலமாக முஸ்லீம் ஊடகவியலாளாகளைக் கொண்ட ஒரு போரம் இயங்குவதையிட்டு சந்தோசப்பபடுகின்றேன்

(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கை வந்துள்ள  தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவருமான பேராசிரியா் முஹம்மது அலி  அவா்களை முஸ்லீம் மீடியாபோரத்தின் நிருவாக உறுப்பிணா்கள் இன்று (15) தெமட்டக்கொட ஜமாத்தே இஸ்லாமிய அலுவலக கூட்ட மண்படத்தில் வைத்து சந்திபபொன்றை நடாத்தினா். இந் நிகழ்வில் போரத்தின் தலைவா் என்.எம். அமீன், மற்றும் தினகரன் ஆலோசகா் எம்.ஏ.எம் நிலாம், பாராளுமன்ற உறுப்பிணா் அலி ஸாகிர் மொளலானாவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனா்.
இங்கு இலங்கையில் வரும் முஸ்லீம்  பத்திரிகைகளான நவமணி, விடிவெள்ளி, எங்கள்தேசம், முஸ்லீம் மீடியாபோரத்தின் டயறி போன்றவை பேராசிரியடிம் என்.எம். அமீனினால் பேராசிரியர் முஹம்மது அலியிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பேராசிரியா்

இந்தியாவில்  கூட முஸ்லீம்களுக்கென்று 3வீதமே ஊடகம் உள்ளது. ஆனால் இலங்கையில் 20 வருடகாலமாக முஸ்லீம் ஊடகவியலாளாகளைக் கொண்ட ஒரு போரம் இயங்குவதையிட்டு சந்தோசப்பபடுகின்றேன். ஆனால் இந்தியாவில் ஊடகவியலாளா்களுக்கு அரசினால்  இலவச போக்குவரத்து, அரச வீடு, ஊடகவியலாளா்களது பிள்ளைகளுக்கு மருத்துவ மற்றும் தணியாா் கல்லுாாிகளில் சலுகை அடிப்படையில் அனுமதி வசதிகளைப் பெற்றுள்ளனா். ஆனால் இலங்கையிலுள்ள ஊடகவியலாளா்கள் தமது அமைப்பின் ஊடாக அரசினால் வாழங்கும் சலுகைகளைப் பெற்றுக் கெள்ள வேண்டும்.  முஸ்லீம்களுக்கென்று தனியான ஊடக நிறுவனங்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும்  1000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்  ஊடகவியலாளா்கள்  ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளதை நாம் வரவேற்கின்றேன். நமக்குள் ஒத்துமை இல்லாவிட்டாலும் அரசியல் கட்சித் தலைவா்கள் ஒன்றுபடவிட்டாலும் ஊடகவியலளாா்கள் தமது சமுகம் ஒரே இறைவன் என்ற அடிப்படையின் நம் சமுகம் சாா்நத விடயத்தில் ஒரு குடையின் கீழ் நாம் செயற்படல் வேண்டும்.  நமது அரசியல் தலைவா்களை ஒருபோதும் ஒன்று சேரமாட்டாா்கள். ஆனால் ஊடகவியலாளா்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. அதனை சரியாக இறைவனுக்கு பயந்து நாம் செயற்படுதல் வேண்டும் எனவும்  பேராசியர் அங்கு தெரிவித்தாா்.

இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பிணா் தமது செயற்பாடுகள் இந்த நாட்டில் யுத்த காலத்தில் முஸ்லீம் சமுகம் அனுபவித்த துன்பகரமான அனுபவங்கள் தற்போதைய அரசின் நிலைப்பாடு முஸ்லீம் சமுத்திற்கு எதிரான செயற்பாடுகள் பற்றி விவரித்தாா்.

Post a Comment

0 Comments