Advertisement

Main Ad

தெஹிவளை - அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா அரபுக் கலாபீடத்தின் 20 வது ஆண்டும், 9வது பட்டமளிப்பும் 14வது தலைப்பாகை சூடும் விழாவும்

(அஷ்ரப் ஏ சமத்)

 தெஹிவளை ஹில் வீதியில் உள்ள அல் ஜாமிஅதுல் கௌஸிய்யா அரபுக் கலாபீடத்தின் 20 வது ஆண்டும், 9வது பட்டமளிப்பும் 14வது தலைப்பாகை சூடும் விழாவும் ஏனைய மாணவா்களுக்கு பரிசலிப்பு விழாவும் இன்று(18) கல்லுாாியி்ல் நடைபெற்றது.  இந் நிகழ் கல்லுாாி அதிபா்  மௌலவி முஹம்மது பைஸல், தலைமையில் நடைபெற்றது. அதில் இந்தியாவைச் சோ்ந்த அஸ்ஸெய்யித் ஏ. ஜ.ஹசன், ஏ.ஜ. ஹுசைன் , மற்றும் பிரதம அதிதி - அல்ஹாஜ் ஹாஜா ஹூசைன் கலந்து கொண்டனா், மௌலவி ஏ.ஏ.அஹமத் அஸ்வா் (அல் -அஸ்ஹரி) சிறப்புரையாற்றினாா்.

இந் நிகழ்வின்போது நாடுபுராவும் 7 வருடங்கள் தங்கி இளம் ஆலிம்களையும் ஹாபிழ்களாகவும் 20க்கும் மேற்பட்டோா் அலீம்களாக வெளியேறினாா்கள்.  அத்துடன் கல்லுாாியில் தங்கி நின்று 100க்கும்  மற்பட்ட மாணவா்கள் பரிசலிப்பு விழாவும் நடைபெற்றது. இம்மாணவா்கள் குர்ஆணை கற்பதோடு க.பொ.த.சா.தரம் , உயா்தரம் பரீட்சைக்கும்  தோற்றுகின்றனா்.  இதுவரை 14v தலைப்பாகை சூட்டுவிழா நடைபெற்றுள்ளது.



Post a Comment

0 Comments