Advertisement

Main Ad

ரஜினிகாந்த் நடிக்கும் 2.O படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி கொண்டு இருக்கும் 2.o திரைப்படத்தின் first look இன்று மாலை வெளியிடப்பட்டது.

ரஜினிகாந்த் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் திரைப்படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் சங்கர் முடிவு செய்து அதற்கான பணிகளை ஆரம்பித்தார்.

அதில் எந்திரனில் நடித்த ரஜினிகாந்த மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு படபிடிப்பும் தொடங்கியது. எந்திரன் திரைபடத்தில் ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்தார், அதைப்போல 2.ஒ திரைப்படத்திலும் முகியமான ஒரு நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நடிகை எமி ஜாக்சன் 2.ஒ வில் ஹீரோயினாக ஒப்பந்தமானர்.

இந்த திரைப்படத்தின் படபிடிப்பு வேலைகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் அதன் firstlookயை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று மாலை மும்பையில் பிரபலமான யாஷ் ராஜ் ஸ்டூடியோவில்  வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றே விமானத்தில் மும்பை பறந்து சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த் நடிக்கும் 2.O படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
https://www.youtube.com/watch?v=_trK1mM29Uw

Post a Comment

0 Comments