Advertisement

Main Ad

காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியை குத்திய கல்லூரி மாணவர் கைது!

ஆண்டிபட்டி அருகே ஒரு தலைக் காதலால் 10ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்ற கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள இராஜகோபாலன்பட்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை அதே ஊரை சேர்ந்த நவீன் என்ற கல்லூரி மாணவர் காதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவி காதலை ஏற்க மறுத்ததால் நவீன், மாணவியை கத்தியால் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி போலீசார் தப்பியோடிய கல்லூரி மாணவர் நவீனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி அருகே சாஸ்தா கோவில் பகுதியில் சுற்றி திரிந்த மாணவர் நவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் மாணவனுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

video 

Post a Comment

0 Comments