மியான்மர் நாட்டை இன்று காலை 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் தாக்கியது.இன்றுகாலை 7.52 மணியளவில் பூமியின் அடியில் சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 அலகுகளாக பதிவானதாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments