Advertisement

Main Ad

சீனாவில் பயங்கர வெடி விபத்து 14 பேர் பலி; 147 பேர் படுகாயம்



சீனாவில் சான்ஸி மாகாணம், ஸின்மின் நகர குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தற்காலிக வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

அங்கு ஒரு வீட்டில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு பலத்த சத்தத்துடன் வெடிப்பு நேரிட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்ததோடு, பக்கத்து கட்டிடங்களும் இடிந்து தரை மட்டமாகின. இப்படி 58  வீடுகள் இடிந்ததுடன், 63 கார்களும் உருக்குலைந்து போயின.

உடனடியாக மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 14 பேர் பிணமாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 147 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 41 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு தொடர்ந்து   சிகிச்சை தரப்படுகிறது.

வெடிவிபத்து நேரிட்ட வீட்டில் சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததே சம்பவத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

வெடிவிபத்து நேரிட்ட வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments