இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை தரை இறங்க இந்தோனேஷிய அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண் ஒருவர், 9 சிறார்கள் உள்ளிட்ட 44 பேர் இந்தப் படகில் உள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் தமிழகத்திலிருந்து புறப்பட்ட இலங்கையர்களின் படகு, இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவின் அச்சே கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளானது.
தத்தளித்துக் கொண்டிருந்த இந்த படகு தொடர்பாக தகவல் அறிந்த இந்தோனேஷிய கடற்படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இருப்பினும், படகில் இருந்த எவரையும் தரை இறங்க அவர்கள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், கரை சேரும் நோக்கில் கடலில் குதித்தவர்களை, இந்தோனேசிய கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர்.
இதனால், புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஒரு வார காலமாக படகில் தத்தளித்து வந்தனர். அவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பும் முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தோனேஷிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தோனேஷிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனால் படகில் இருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளையும் தற்போது தமது நாட்டில் தரை இறங்குவதற்கு இந்தோனேஷிய அரசு அனுமதித்துள்ளது. அவர்களை ஐ.நா. பிரதிநிதிகள் சந்தித்துப் பேச உள்ளனர்.
newsfirst
0 Comments