(செய்தியாளர் : கரீம் ஏ. மிஸ்காத் மன்னாரிலிருந்து)
இரண்டு நாட்களாக நடைபெறும் , மன்னார் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாட்டின் இரண்டாம் நாளாகிய (15/06/2016) மன்/அல்ஸ்ஹர் தேசிய பாடசாலையில் காலை 8:00 மணியிலிருந்து 2:00 மணிவரையும், ஆசிரியர்களின் கைவினை கண்காட்சியும். 3:00 - 6:00 மணிவரையும் கலை நிகழ்ச்சிகளும் சித்விநாயகர் தேசிய பாசாலையிலும் இடம்பெற்றது. மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி: செபஸ்டரியன் தலைமையில் இடம்பெற்ற . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கலந்து கொண்டார்.
அத்தோடு பிரதம பேச்சாளராக பேராசிரியர் எஸ்.எஸ். எச். ஹஸ்புள்ளாஹ் (பேராதெனிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ) அவர்களும் கலந்து கொண்டார்.
பேராசிரியர் ஹஸ்புள்ளாஹ் உறையாற்றுகையில்:
மன்னார் மாவட்டத்தில் நான் பிறந்து இங்கிருந்தே பேராதனை பல்கலைக்கழகம் சென்று அங்கேயே விரிவுரையாளராகினேன், மேலும் 1980ம் ஆண்டு மன்னார் மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் அடைந்து இருந்து, துரதிர்ஷ்டவசமாக நீண்டகால யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டம் கல்வி மட்டும் அல்லாது எல்லா நிலையிலும் பின்தங்கியுள்ளது.
இந்நிலையை, ஆரம்ப கல்வி, பாடசாலை கல்வியால் மட்டும் தீர்வு காணமுடியாது. அரசியல் தலைமைகளும் நீண்ட காலம் அபிவிருத்தியை மையமாக கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்ற முன்வரவேண்டும்.
எனது பார்வையில் யாழ்ப்பாணம், வவுனியா, ஏன் தற்போது கிளிநொச்சியிலும் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக வளாகம் நிறுவப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
இந்நிலை மன்னார் மாவட்டத்துக்கும் ஏற்படுத்த வேண்டும் . இதற்கு அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்.
மேலும் நான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மூதைவயின் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் மன்னாரிலும் ஒரு பல்கலைக்கழக வளாகம் உருவாக்க முயற்சிப்பேன் என்றார்.
மேலும் முஸ்லிம் ஆசிரியர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
|
0 Comments