உலகக்கோப்பை டி-20 பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தியது.
மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் அணி இன்று பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலிய மகளிரணி களமிறங்கியது.

19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களைக் குவித்து இலக்கை எட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி. மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹேலே அபாரமாக ஆடி 66 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 59 ரன்கள் எடுத்தார்.
ஒரு ஆட்டத்தில்கூட தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை, முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன்மூலம் முதல்முறையாக டி 20 உலகக் கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணியைச் சார்ந்த ஹெய்லி மேத்யூஸ் ஆட்ட நாயகி விருது பெற்றார்.
0 Comments