Advertisement

Main Ad

தள்ளாத வயதில் இருந்த தன்னைத் தாக்கி பொருட்களைப் பறித்துக் கொண்டவர்களை மன்னித்தார் பார்வையற்ற 103 வயது மூதாட்டி

தள்ளாத வயதில் இருந்த தன்னைத் தாக்கி பொருட்களைப் பறித்துக் கொண்டவர்களை அமெரிக்காவில் வாழும் 103 வயது மூதாட்டி ஒருவர் மன்னித்துள்ளார்.
Image copyrightGetty
Image captionநியூ யார்க் நகரில் முதியோர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து கவலைகள்
நியூ யார்க் நகரில் வாழ்ந்து வரும் கண்பார்வை இல்லாத லூயிஸ் சிக்னோர் அம்மையார் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவந்தபோது அவரது வீட்டுவாசலில் தாக்கப்பட்டார்.
அவரைத் தாக்கியவர்கள் அவரைக் காயப்படுத்தியதுடன், அவரிடம் இருந்த பொருட்களையும் களவாடிச் சென்றனர்.
எனினும் இச்சம்பவத்துக்கு பிறகும் தனது வாழ்க்கை முன்னரைப் போலவே இயல்பாகக் கொண்டுச் செல்லவுள்ளதாக லூயிஸ் சிக்னோர் அம்மையார் கூறுகிறார்.
இச்சமப்வம் தொடர்பில் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்பார்வை இல்லாத நிலையிலும் தன்னைத் தாக்கியவரை அந்த மூதாட்டி மன்னித்துள்ளது ஏராளமானோரை நெகிழ வைத்துள்ளது.

Post a Comment

0 Comments