(க.கிஷாந்தன்)
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து லிந்துலை சின்ன இராணிவத்தை தோட்டத்தில் வெகுவிமர்சையாக 13.03.2016 அன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது.
இதில் மன்மதன், ரதிதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர். இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.
பெரிய இராணிவத்தை, சின்ன இராணிவத்தை, லிந்துலை, நோனா தோட்டம், பம்பரக்கலை, குட்டிமலை, பேரம் ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த மக்கள் இவ்விழாவில் கலந்துக்கொண்டிருந்தனர்.
0 Comments