
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் கழகங்களின் சம்மேளன புனரமைப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை (12.03.2016) மட்-சந்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி மன்றத்தில் மாவட்ட சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர் திரு எஸ்.திவ்யநாதன் தலைமையில் இடம் பெற்றது.
2016ஆம் வருடத்தின் புதிய மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் அமைப்பாளராக ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர்; ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
பதவி வழிமுறையாக தலைவர், செயலாளர், பொருளாளர், அமைப்பாளர் என்னும் நான்காவது இடத்தில் உள்ள அமைப்பாளர் பதவிக்கு போட்டிகள் அதிகம் காணப்பட்டன ஐந்து நபர்கள் இப்பதவிக்காக பிரோரிக்கப்பட்ட நிலையில் இருவர் தமது விருப்பத்தின் பெயரில் பின்வாங்கி கொண்டனர்.
ஆனால் மூன்று போர் இப்பதவியினை பெற வேண்டும் என்ற உறுதியான நிலையில் போட்டியிட்டனர்.
காத்தான்குடி பிரதேச சம்மேளனம் சார்பில் கே.எம்.அஸாம் அவர்கள்27 வாக்குகளையும் ஏறாவூர் பிரதேச சம்மேளனத்தின் உப செயலாளர் வீ.ரீ.கபூர்-02 வாக்குகளையும் பெற்றார் இவர்களை எதிர்த்து அமைப்பாளர் பதவிக்கு போட்டியிட்ட ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சம்மேளன தலைவர் எம்.ரீ.எம்.பாரிஸ் அதிகபடியான தமிழ்,முஸ்லிம் இளைஞர்களினது 37 வாக்குகளை பெற்று அமைப்பாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார். தலைவர்,அமைப்பாளர் பதவிகளுக்கு மாத்திரமே போட்டிகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இவா் கடந்த வருடத்திற்கு முன் மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவராக மிகச்சிறப்பாக கடமையாற்றியமை தமிழ்,முஸ்லிம் இளைஞா்களின் நன்மதிப்பு மிக்கவராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் பணிப்பாளர் திருவாளர் கே.தவராஜா மற்றும் மட்டு.பிராந்திய உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் அமைப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் “எம்மை தழிழர்,முஸ்லிம் என்று இன ரீதியாக பிரிந்து பாக்காதீர்கள் நாங்கள் இளைஞர்கள் இன,மத வேறுபாடுகளை புறம் தள்ளி மனிதர்கள் என்ற ரீதியிலும் “இலங்கை இளைஞர்கள்” என்ற நாமத்தில் நாம் ஒன்றினைத்துள்ளோம். 2016ஆம் வருடத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் புனரமைப்பு முற்றிலும் இன வாதத்திற்கும்,முரன்பாடுகளுக்கு
0 Comments