இலங்கை வானொலி ஒலிபரப்பாளரும்,கவிஞருமான எச்.ஜனூஸ் எழுதிய மூசாப்பும் ஒரு முழ வெயிலும் கவிதை நூல் அறிமுக விழா நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
கவிஞர் பாலமுனை பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.பீர் முஹம்மது, சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி என்.ஆரிப் உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் நூலின் முதற்பிரதியினை கல்முனை ஹபீப் வங்கியின் முகாமையாளர் ஏ.எல்.அன்வர்தீனுக்கு வழங்கி வைத்து நூலினை அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ்,
பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அரசியலில் பலம் பொருந்திய அமைச்சராக, அதிகாரம் கொண்டவராக நிகழ்ந்த போதிலும் அவர் கவிஞராக கட்சிக்காக பாடல்களையும், கவிதைகளையும் எழுதி அதனூடாக முஸ்லிம் காங்கிரஸினை மக்கள் மனங்களில் வேரூண்ட வைத்து அதில் வெற்றியும் கண்டார்.
இன்று பெருந்தலைவரினால் எழுதிய கட்சியின் பாடல்கள் போராளிகளையும் ஆதரவாளர்களையும் ஆட்கொண்டுள்ளது. இது கவிதையின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றது.
கவிதைகள், பாடல்கள் ஊடாக சமூக எழுச்சியை ஏற்படுத்தலாம் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
- ஊடகப் பிரிவு -
0 Comments