Advertisement

Main Ad

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டு தொண்டர் படையணியின் பிரச்சாரப் பவனி - 16.03.2016, புதன்கிழமை காலை 8.00 மணி...........



எதிர்வரும் 19.03.2016 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு தொண்டர்களாகப் பெயர் கொடுத்துப் பதிவு செய்த அனைத்து இளைஜர்களுக்கும் 'தொப்பி மற்றும் ரீ சேட்' வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் 16.03.2016, புதன்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அத்தோடு அன்றைய தினமே, ஒன்று சேரவிருக்கும் அனைத்து இளைஜர்களினதும் பங்குபற்றதலோடு காலை 8.30 மணி தொடக்கம் கல்முனை மற்றும் சம்மாந்துறை பஷார்களில் (மார்க்கட்) தேசிய மாநாடு பற்றிய பிரச்சார பவனியும் இடம்பெறவுள்ளது. இதற்கான வாகான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, 16.03.2016, புதன்கிழமை காலை 8.00 மணிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு தொண்டர்களாகப் பெயர் கொடுத்துப் பதிவு செய்த அனைத்து இளைஜர்களையும் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வண்ணம்
கட்சிப் பணியில்
ஏ.எல்.தவம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்,
இளைஜர் விவகார மற்றும் வேலைவாய்ப்புச் செயலாளர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Post a Comment

0 Comments