Advertisement

Main Ad

NFGGயின் ஏற்பாட்டில் மகளிருக்கான விஷேட கருத்தரங்கு

எம்.ரீ. ஹைதர் அலி


 NFGG ஊடகப்பிரிவு

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கான கருத்தரங்கு நிகழ்வு ஒன்று கடந்த 22.02.16 (திங்கட்கிழமை) அன்று காத்தான்குடியில் அமைந்துள்ள NFGG யின் பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளருமான DR.ILM.ரிபாஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .மேலும் NFGGயின் மட்டக்களப்பு பிராந்திய சபையின் சிரேஷ்ட உறுப்பினர்AGM ஹாறூன்,மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள், NFGGயின் மகளிர் அணி உறுப்பினர்கள்சகோதரிகள்யுவதிகள்  உட்பட பலரும்கலந்து கொண்டிருந்தனர்.

NFGGயினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பெண்கள் வலுவூட்டல் செயற்திட்டங்களின் ஓர் அங்கமாகவே மேற்படி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. NFGGயின் மகளிர் அணி உறுப்பினர் பஹ்மியா ஷரீப் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்,தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.ILM. ரிபாஸ் அவர்கள் சிறப்புரை ஒன்றினை ஆற்றினார். குறிப்பாக இன்று இஸ்லாத்தை அதன் தூய வடிவில் புரிந்து கொள்வதிலும்அதனூடாக பிள்ளைகளை சிறந்த ஆழுமையாளர்களாக வளர்த்தெடுப்பதில் சமூகத்தில் காணப்படுகின்ற சவால்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். NFGG வெறுமனே அரசியல் அறிவூட்டல்களை மாத்திரம் செய்கின்ற இயக்கம் இல்லை எனவும் அதற்குமப்பால் மக்களின் உடல்உளஆன்மீக மேம்பாட்டில் கவனம் செலுத்துகின்ற ஒரு அமைப்பாகும் எனவும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வின் இறுதியில் சமூகமளித்திருந்த சகோதரிகளின் கருத்துக்களுக்கும் கேள்விகளுக்குமான நேரம் வழங்கப்பட்டுஅது தொடர்பான விளக்கங்களும் கலந்துரையாடப்பட்டன. இக்கருத்தரங்கானது மிகவும் சிறப்பாகவும் பயன்மிக்கதாகவும் அமைந்திருந்ததாகவும் இவ்வாறான அறிவூட்டற் கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்து நடாத்த வேண்டுமெனவும் கலந்து கொண்ட சகோதரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் குறித்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய புத்தகங்கள்இணையத்தள முகவரிகள் போன்றவற்றின் தகவல்களையும் எதிர்வரும் நிகழ்வுகளின் போது வழங்கி வைத்தால்கற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பான ஆழமான தேடல்களை மேற்கொள்ள வசதியாக இருக்குமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இறுதியில் இவ்வாறான செயலமர்வுகளை எதிர்வரும் நாட்களில் ஏற்பாடு செய்து நடாத்த NFGGயின் பிராந்திய சபை தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தான் ஊருக்கு வருகை தந்து வளவாளராகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதன்போது சகோதரிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ளப்படுமெனவும் Dr. றிபாஸ் தெரிவித்தார்

பெண்கள் வலுவூட்டல் செயற்திட்டங்களின் மற்றொரு அங்கமாக வட்டார ரீதியில் மகளிர் குழுக்களுடனான கலந்துரையாடல்களும் சந்திப்புகளும் NFGGயினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments