Advertisement

Main Ad

எமது பிள்ளைகள் குப்பி விளக்கில் கல்வி கற்கிறார்கள் - நோர்வூட் மேற்பிரிவு மக்களின் அவலம்...( படங்கள் )

(க.கிஷாந்தன்)

இந்த நவீன காலத்திலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் சமூகத்தில் எதிர்காலத்தை தீர்மானிப்பது எவ்வாறு என்ற மனதாக்கத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள் நோர்வூட் மேற்பிரிவு தோட்ட மக்கள்.

அத்தோடு பருவம் அடைந்த பெண் பிள்ளைகளை பராமரிக்கும் சூழ்நிலைகளை இழந்துள்ள நிலையில் திருமணம் வயதுக்குட்பட்ட ஆண், பெண் பிள்ளைகளுக்கு உரிய வேளையில் திருமண வைபவங்களை நிகழ்த்த முடியாத அவல நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
இந்த தோட்டம் நோர்வூட் நகரத்திலிருந்து 03 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. இவர்கள் வாழும் குடியிருப்புகள் வெள்ளையர்களின் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளாக இருக்கின்றன.


பிள்ளைகள் தனியாக இருக்கின்ற வேளைகளில் இடிந்து விழுந்தால் எங்களது பிள்ளைகளை பறிகொடுக்க வேண்டிய நிலையேற்படும். இந்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட இந்த குடியிருப்பு தொகுதியில் பனிரெண்டு காம்பராக்களிலும் பனிரெண்டு குடும்பங்களை சேர்ந்த 60 பேர் வசித்து வருகின்றோம் என இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தோட்டத்தின் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் உட்கட்டமைப்பு  வசதிகள் பாதை, குடிநீர், வீடுகள் பற்றாக்குறை, வடிக்காண்கள், மலசலகூடம் என சுகாதார அடிப்படை வசதிகளை எவரும் செய்து கொடுக்காத நிலைகளில் மிகவும் மோசமான நிலையில் தங்களது வாழ்க்கையை நகர்த்துவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நவீன காலத்தில் மின்சார வசதிகள் கூட இல்லாமல் குப்பி விளக்குகளை வைத்து கல்வி கற்கும் மாணவர்களும் இங்கு இருக்கின்றார்கள்.

எனவே நாங்கள் படும் வேதனைகளை புரிந்து கொண்டு மலையக அரசியல்வாதிகள் மௌனம் சாதிக்காமல் இப்பிரச்சினைக்கு விடிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும்.

தாங்கள் படும் வேதனைகளை எங்களின் பிள்ளைகளும் படக்கூடாது என நினைத்தாலும் இத்தோட்டத்தில் தற்போது காணப்படும் நிலைமையை பார்க்கும்போது எங்களது பிள்ளைகளும் எங்களை போன்று வாழ வேண்டிய சூழ்நிலையே அதிகமாகவுள்ளது. இப்பாதை போக்குவரத்து வசதிக்கு உகந்ததாக இல்லை. மிகவும் மோசமான நிலையில் உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இப்பாதையினை செப்பணிட்டுதர எந்தவொரு அரசியல்வாதிகளும் வரவில்லை.

எத்தனை தொழிற்சங்கங்கள் இருந்தபோதிலும் எங்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கிட்டியதாக இல்லை என இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே மலையகத்தை பிரிதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல்வாதிகள் மக்களை அரசியல் பகடகாய்களாக பார்க்காமல் மக்களுடைய தேவைகளை அறிந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமாகும்.













Post a Comment

0 Comments