Advertisement

Main Ad

நாவலபிடிய பிரதேச தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் - பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

நாவலபிடிய பஸ் பாகேகோரள பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாவலபிடிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்கள் நாவலபிடிய பிரதேசத்தின்  தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தார். அதன் போது புதிய அரசாங்கத்தின் தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் கொள்கையை எடுத்துக்கூறினார்.


தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் தொடர்பான கேபினட் தீர்மானத்தின் படியும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட முன்மொழிவின் படியும் தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் நடைபெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். எனினும் அது தொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரையும் நாவலபிடிய பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே நாவலபிடிய பிரதேச தோட்ட மக்களுக்கான காணி வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அது மட்டுமன்றி கடியன்லேனை மற்றும் பார்கேபல் பிரதேசங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் உள்ளதையும் சுட்டிக்காட்டினார். அதனால் பல பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டாலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இல்லை. அதனை சுட்டிக்காட்டி வன விலங்கு தினைகலத்திடமிருந்து விசேட குழு துரிதமாக வருவிக்கப்பட்டு இப்பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டுமென தீர்மாணிக்கப்பட்டது. மற்றும் கலபொட தோட்ட மக்கள் எதிர்நோக்கும் கிராம அலுவலர் பிரச்சினை மின்சார பிரச்சினை புகையிரத கடவை பிரச்சினை தொடர்பாகவும் தீர்மானமெடுக்கப்பட்டது.

தோட்ட மக்களுக்கான காணி வழங்களை முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. தரவுகளை திரட்டிக்கொள்வது மற்றும் கோவைபடுத்திக்கொlவது போன்ற அடிப்படை வேலைகளை சுயட்ச்சையான முறையில் மேட்கொள்ளவேண்டியுள்ளது. அதன் போதே இன் நடவடிக்கையை நாம் துரிதப்படுத்திக்கொள்ள முடியும். தொடர்ந்து வருகின்ற காலப்பகுதியில் ஏனைய பிரச்சினைகளையும் இனம் கண்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Post a Comment

0 Comments