Advertisement

Main Ad

இலங்கை வந்த நியூசிலாந்து பிரதமருக்கு யானை குட்டியை வழங்கிய ஜனாதிபதி

(எம்.எம்.மின்ஹாஜ்)
இலங்கைக்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ இன்று ஜனாதிபதி செயலகத்தில்   அரச மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  இதன்போது அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் , நியுசிலாந்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில்  துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
அத்துடன்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும்  நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவாரத்தைகளும் நடத்தப்பட்டன. 
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் யானைக் குட்டியொன்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியூசிலாந்து பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
 ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ஹரீன் பெர்ணான்டோ, துமிந்த திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, பீ ஹரிசன், ரிஷாத் பதியுதீன்  மற்றும் தயா கமகே , பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா உள்ளிட்டோர்  கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments